மன்னார் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்
மன்னார் ஊடகவியலாளர் ஆர்.ரவிக்குமாரின் வீட்டின் மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள கோவில் மோட்டை கிராமத்தில் காணி பிரச்சினை தொடர்பாக கோவில் மோட்டை கத்தோலிக்க விவசாயிகள் மற்றும் மடு தேவாலயத்திற்கு இடையில் காணப்பட்ட பிரச்சினை தொடர்பாக செய்திகளை வெளியிட்ட ஊடகவியளாலருக்கு மதகுரு ஒருவர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த நிலையில் அவரது வீட்டின் மீதும் நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட போது வீட்டில் குறித்த ஊடகவியலாளரின் மனைவியும் பிள்ளைகளுமே இருந்த நிலையில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பாக மடு பொலிஸில் ஊடகவியலாளர்கள் சகிதம் சென்று முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது.
No comments