வவுனியாவில் கொவிட் தொற்றால் இருவர் மரணம்
கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவரே சிகிச்சை பலனின்றி நேற்று (26) மரணமடைந்துள்ளனர்.
வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவரும்இ உக்குளாங்குளம் பகுதியை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.
இதேவேளை வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சில நேற்று (26) இரவு வெளியாகியுள்ளன.
வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கொரோனா தொற்று 20 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments