Breaking News

சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் உட்பட 18 பேருக்கு கொரோனா

பதியத்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர், பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவா் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் 5 பேர் உள்ளிட்ட 18 பேருக்கு, (28 ஆம் திகதி) கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பதியத்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

பதியத்தலாவ, சரணகம, ஹாகம்வெல, கிரவான, தலாபிட்டஓய வடக்கு உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள ஏராளமான நோயாளர்களுக்கே இவ்வாறு சில தினங்களாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் அனைவரும், இரண்டாம் கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளவர்கள் என்பதுடன், இந்நோயாளர்களில் சிலர் பாடசாலை மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments