Breaking News

வவுனியாவில் 262 பேருக்கு மானிய முறையில் விதை உழுந்து வழங்கி வைப்பு

வவுனியாவில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அமைச்சின் ஊடாக 262 பேருக்கு மானிய முறையிலான விதை உழுந்து வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இலங்கையின் உழுந்து இறக்குமதியின் அளவினை தீர்மானிக்கும் மாவட்டமும் இலங்கையில் அதிகூடிய உழுந்து உற்பத்தியினை கொண்ட மாவட்டமாகும்.
மேலும் வவுனியா மாவட்டதில் உழுந்து உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் 42 கிராம சேவையாளர் பிரிவினை சேர்ந்த வறுமைக்கோட்டிற்குட்பட்ட 262 சிறுதானிய செய்கையாளர்களிற்கான விதை உழுந்தினை வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திகுழு தலைவருமான கு.திலீபனால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த விதை உழுந்தானது ஒருவருக்கு 06 கிலோ வீதம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வல் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திருமதி சந்திரகுமார், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

No comments