Breaking News

ஐந்து வயது குழந்தையும் ஆயுதம் ஏந்தியதா?

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10.00 மணிக்கு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது, எங்கே எங்கே உறவுகள் எங்கே, கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பியிருந்ததோடு, உங்கள் இராணுவத்தின் உறுதி மொழியை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள், தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா, ஐந்து வயது குழந்தையும் ஆயுதம் ஏந்தியதா போன்ற பதாதைகளை ஏந்தியவன்னம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments