Breaking News

இரண்டு மாவட்டங்களின் இரு பிரதேசங்களுக்கு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலக பிரிவு மற்றும் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பிரதேச செயலக பிரிவு ஆகியவற்றுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 9 வரை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது. 


No comments