Breaking News

வவுனியம்” விருதுகளுக்கு விண்ணப்பங்கோரல்

“வவுனியம்”, “வவுனியம் முதுஇளவல்”, “வவுனியம் கலை இளவல்”, ஆகிய விருதுகளுக்கு மாவட்ட மட்டத்திலிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எனவே தங்களது பிரதேசத்திற்குட்பட்ட விண்ணப்பங்களை இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது. 

வழங்கப்படவுள்ள குறித்த விருதுகளில் வவுனியம்2 விருதுகள்(60 வயதுக்கு மேற்ப்பட்டோர்), வவுனியம் முது இளவல் 2 விருதுகள்(40-60 வயதுக்குஇடைப்பட்டோர்) வவுனியம் கலைஇளவல் 2 விருதுகள்(40 வயதுக்கு கீழ்ப்பட்டோர்) குறித்த விண்ணப்பங்களை அனுப்பமுடியும்.

தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும் துறையை குறிப்பிட்டு அவரது கலை,பணி,வரலாற்று சுருக்கத்தையும் இணைத்து ஒக்டோபர்மாதம்(10) 25 ஆம் திகதிக்கு முன்னதாக பிரதேசசெயலகம் வவுனியா என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கும் படி கோரப்பட்டுள்ளது.


No comments