ரி 20 உலகக்கிண்ணம் - இறுதிப் போட்டிக்கு நியூஸிலாந்து தகுதி
உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூஸிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணியுடன் இன்று இடம்பெற்ற அறையிறுதிப் போடடியில் 5 விக்கெட்களினால் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் பிரவேசித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி, இங்கிலாந்து அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இதன்படி, முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.
மெஹின் அலி ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும், டேவிட் மாலன் 41ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியது.
No comments