Breaking News

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி விலகுவதாக அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான மிக்கி ஆர்தர் தமது பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு தாம் பதவி விலகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதன்பின்னர், டெர்பிஷயர் பிராந்திய கிரிக்கெட் கழகத்துடன், 3 வருட ஒப்பந்தத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் தொடர்பில், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயலாளர் மொஹான் டி சில்வா ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் அவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments