Breaking News

வவுனியாவில் உயிருக்கு போராடிய யானை சிகிச்சை பலனின்றி மரணம்.

வவுனியா, நெடுங்கேணி - ஊஞ்சால்கட்டி காட்டுப்பகுதியில் கடந்த வாரம் காயங்களுடன் யானை ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை அவதானித்த பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் அந்த யானை உடம்பு மற்றும் காலில் ஏற்பட்ட வலி தாங்க முடியாமல் காட்டுக்கு செல்லாமல் மீண்டும் காட்டின் அருகே நான்கு நாட்களாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் (07) வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களின் உதவியுடன் , வடக்கு மாகாணத்தின் கால்நடை வைத்தியர் கிரிதரன் குழுவினரால் சிகிச்சையளிக்கப்பட்டிருந்தது.

கால், உடம்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் வைத்தியர் பல மணிநேர தீவிர வைத்திய சிகிச்சை மேற்கொண்டிருந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (08) மரணமடைந்துள்ளது. 

குறித்த யானை 20 வயது மதிக்கத்தக்க எட்டு அடி உயரமுடையதாக காணப்பட்டுள்ளது.

No comments