Breaking News

வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளால் மகஜர் கையளிப்பு!

மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனை தீர்க்குமாறு கோரி வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் மகஜர்ஒன்று கையளிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளான சாந்தகுமார்,மக்கீன் முகமதுஅலி ஆகிய மாற்றுத்திறனாளிகளால் குறித்த மகஜர் இன்று கையளிக்கப்பட்டது.

குறித்த மகயரில் பிரதேச வைத்தியசாலைகளில் மாற்றுத்திறனாளிகளின் சில தேவைகள் பூர்த்திசெய்யமுடியாமல் உள்ளது அவற்றை சீர்படுத்தல், மாற்றுத்திறனாளிகளிற்கான கொடுப்பனவு வழங்குவதில் ஒரு முறைமையை உருவாக்குதல்,மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளின் கல்விக்கு உதவிசெய்தல், மின்சாரத்தில் இயங்கும் மோட்டார்சைக்கிள்கள் வழங்கல், அவர்களது உற்பத்திப்பொருட்களுக்கு உரிய சந்தைவாய்ப்பினை வழங்குதல், உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த மகஜர் வழங்கப்பட்டது

No comments