Breaking News

ஜனாதிபதியின் அக்கிராசன உரை இன்று 09வது பாராளுமன்றத்தின் 2வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்












09வது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர், இன்று (18) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, முற்பகல் 10 மணிக்கு அக்கிராசன உரையை நிகழ்த்தவுள்ளார். 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்ததை அடுத்து, 09வது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கடந்த டிசம்பர் மாதம் 12ம் திகதி முடிவுக்கு கொண்டுவந்திருந்தார்.

அரசியலமைப்பின் 70 (1) சரத்துக்கு அமைய, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், பாராளுமன்ற கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முடிவுக்கு கொண்டுவந்திருந்தார். 

பாராளுமன்றத்தின் 2வது கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 18ம் திகதி வரை ஜனாதிபதியினால் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது 9வது பாராளுமன்றத்தின் 2வது கூட்டத் தொடர் வைபவ ரீதியில் இன்று (18) ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அக்கிராசன உரையை நிகழ்த்தவுள்ளார்.

பாராளுமன்றத்திற்கு இன்றைய தினம், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், இராஜதந்திர அதிகாரிகள், சட்ட மாஅதிபர், நீதியரசர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பிரசன்னமாகவுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பான விவாதத்தை நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இணக்கம் எட்டப்பட்டுள்ளது.(Vavuniyan)


No comments