மின்சாரம் இன்று (10) துண்டிக்கப்படுமா?
இலங்கை மின்சார சபை நட்டத்தில் இயங்குகின்றமையை கருத்திற் கொண்டு, இன்றையதினம் (10) முதல் மின் விநியோக தடையை ஏற்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய காலப் பகுதி மற்றும் நேரம் குறித்து இலங்கை மின்சார சபையே தீர்மானிக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், இன்று (10) முதல் மின்விநியோகம் தடைப்படுமா? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது.
மின் விநியோக தடையை ஏற்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கிய போதிலும், தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே மின் விநியோகம் தடை செய்யப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
இதேவேளை இன்றைய தினம் மின்சார விநியோகம் தடை செய்யப்படாது எனவும் இலங்கை மின்சார சபை நேற்று அறிவித்துள்ளது. (Vavuniyan)
No comments