Breaking News

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா


சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கமும் இராமகிருஸ்ன மிஷனும் இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் விவேகானந்தரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. 

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நடராஜர் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தமிழ்நாட்டின் கோயம்புதூர் இராமகிருஸ்ணமிஷன் வித்தியாலய சுவாமி ஹரிவ்ரதானந்த மஹராஜ் மற்றும் கொழும்பு இராமகிருஸ்ன மிஷன் சுவாமி அஸராத்மானந்தமகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.





No comments