Breaking News

மின்சார சபையின் இன்றைய (15) புதிய அறிவிப்பு


நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் இன்று,(15) மின் விநியோகம் தடை செய்யப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

மின் உற்பத்திக்காக பெற்றோலிய கூட்டுதாபனத்தினால் 3000 மெற்றிக் தொன் டீசல் கிடைத்துள்ளதாகவும் சபை கூறுகின்றது.

இதன் காரணமாக, இன்று மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படாது என்று மின்சார சபை குறிப்பிடுகின்றது.

இதேவேளை, மின்சாரத்தை மிக சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை, பொதுமக்களிடம் வேண்டுகோள்விடுக்கின்றது.(Vavuniyan) 


No comments