15/01/2022 இன்றைய ராசிபலன்
மேஷ ராசி அன்பர்களே - சந்திரன் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பண வருமானம் பெருகும்.
ரிஷப ராசி அன்பர்களே - சந்திரன் இன்றைய தினம் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார்.இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகள் வழியில் அனுகூலமான பலன்கள் நடக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.
மிதுன ராசி அன்பர்களே - சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் இருந்த பிரச்சினை நீங்கும். குடும்பத்தினர் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.
கடக ராசி அன்பர்களே - சந்திரன் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.
சிம்ம ராசி அன்பர்களே - சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். செலவுகள் குறையும்.
கன்னி ராசி அன்பர்களே - சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் கவனமும் நிதானமும் தேவை. இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் நன்மை ஏற்படும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். பிள்ளைகளால் சுபகாரியங்கள் நடைபெறும்.
துலா ராசி அன்பர்களே - சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வீண் செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்-. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.
விருச்சிக ராசி அன்பர்களே - சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். இன்று உங்களுக்கு மன உளைச்சல் உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.
தனுசு ராசி அன்பர்களே - சந்திரன் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
மகர ராசி அன்பர்களே - சந்திரன் இன்றைய தினம் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வேலையில் இருப்பவர்கள் பணியில் கவனமுடன் இருப்பது நல்லது. உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும்.
கும்ப ராசி அன்பர்களே - சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு நன்றாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளால் சுப காரியங்கள் நடைபெறும்.
மீன ராசி அன்பர்களே - சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். சுகமான நாள். இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். தேவையற்ற அலைச்சல்கள் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளிக்க சற்று கவனமுடன் இருப்பது நல்லது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. லாபமான நாள். திடீர் பண வரவு வரும்.
Post Comment
No comments