200 ரூபாவை தாண்டிய அரிசியின் விலை - அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்
நாடு முழுவதும் அரிசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காண முடிகின்றது.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை இரத்து செய்யப்பட்ட நிலையில், அரிசிக்கான விலை தற்போது அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
கடந்த வாரம் 190 ரூபாவிற்கு காணப்பட்ட ஒரு கிலோகிராம் நாட்டரிசி, இன்று (17) 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அடுத்த வாரம் மேலும் விலை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தமக்கு அறிவித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மரக்கறி விலைகளும் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments