2021ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மனுத்தாக்கல்
2021ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் செயற்பாட்டாளர் நாகாநந்த கொடித்துவக்கினால் இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்மனுவின் பிரதிவாதிகளாக கல்வி அமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
நிலவும் கொரோனா சூழ்நிலை காரணமாக உயர்தர மாணவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி நிபுணர்களாலும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 7ம் திகதி 2021ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(Vavuniyan)
No comments