Breaking News

2022ன் முதல் போட்டியில் இலங்கைக்கு வெற்றி


சிம்பாப்வே அணியுடனான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்களினால் வெற்றியீட்டியுள்ளது.

கண்டி − பல்லேகல மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 296 ஓட்டங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து 297 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 48.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 300 ஓட்டங்களை பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியது. (Vavuniyan) 




No comments