Breaking News

வவுனியாவில் ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள்


தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை நாடுமுழுவதும்  இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியது.

அந்தவகையில் இம்முறை வவுனியா மாவட்டத்தில் பரீ்ட்சைக்கான அனைத்து தயார்படுத்தல்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 3051 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அதற்காக 35 பரீட்சை மத்திய நிலையங்களும், 14 இணைப்புக்காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை  நாடாளாவிய ரீதியில் புலமைபரிசில் பரீட்சைக்காக   சுமார் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் இன்றையதினம் பரிட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது(Vavuniyan)








No comments