தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வழமைப்போன்று ஞாயிற்று கிழமை நடைபெறாது என்றும் நாளை சனிக்கிழமை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம் (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக 108 பரீட்சை மத்திய நிலையங்கள் செயற்பட உள்ளதுடன், மொத்தமாக 2,943 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அத்தோடு குறித்த பரீட்சையில் தமிழ் மொழியில் 85 ஆயிரத்து 446 பேரும், சிங்கள மொழி மூலம் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 63 பேரும் தோற்றவுள்ளதுடன்இ மொத்தமாக 3 இலட்சத்து 40 ஆயிரத்து 508 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவித்தார்.
மாணவர்கள் எந்தவித அச்சமும் இன்றி 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுமாறு தெரிவித்திருந்தார்.(Vavuniyan)
No comments