மலையக இளைஞர், யுவதிகளை பலியெடுத்த ஆற்றிலிருந்து 5வது சடலமும் கண்டெடுப்பு
பதுளை – கரந்திஎல்ல பகுதியிலுள்ள ஆற்றில் நிராடிக் கொண்டிருந்த தருணத்தில், நீரில் அடித்துச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன ஐவரில், நால்வரின் சடலங்கள் நேற்றைய தினம் (29) கண்டெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், காணாமல் போன ஐந்தாவது யுவதியின் சடலம் பாரிய பிரயத்தனங்களுக்கு மத்தியில் இன்று (30) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
22 வயதான யுவதி ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments