Breaking News

5ம் தர புலமை பரிசில் பரீட்சை இன்று


5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22) நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது

கொவிட் 19 தொற்று காரணமாக பிற்போடப்பட்டிருந்த புலமைப்பரிசில் பரீட்சை, முன்னர் குறித்த தினத்தின் படி இன்று  நடைபெறவுள்ளது.

2021ஆம் ஆண்டில் குறித்த பரீட்சையை நடத்துவதற்கு திருத்தப்பட்ட நேர அட்டவணைகள் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு அமைச்சரவை அனுமதி பெறப்பட்டது. 

இதன்படி 2,943 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், தமிழ் மொழி மூலமாக 85,445 மாணவர்களும், சிங்கள மொழி மூலமாக 2,55,062 மாணவர்களுமாக மொத்தம் 3,40,507 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

கொவிட் 19 தொற்று காரணமாக தமது பரீட்சைக்கு தேவையான உபகரணங்களை உரிய மாணவர்கள் வைத்திருக்க வேண்டுமெனவும் பிற மாணவர்களிடமிருந்து பெறுவதற்கு அனுமதியில்லை எனவும் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்தார்.

இன்று காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால், 8 மணிக்கு முன்னரே மாணவர்களை அழைத்து வருமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்(Vavuniyan) 


No comments