பல ஆண்டுகளாக நிறைவு பெறாத ஏ9 வீதியின் பிரதான கட்டுமானப்பணி
பல ஆண்காலமாக ஏ9 வீதியில் வவுனியா நொச்சிமோட்டை பால வேலை நிறைவு பெறாத நிலையில் காணப்படுவதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் நொச்சிமோட்டை பால அபிவிருத்தி பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்று வருகின்றது.
இதன் காரணமாக யாழ் வீதியின் ஊடாக பயணிப்போர் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த பால வேலையில் தினமும் இருவர் அல்லது மூன்று பேரே வேலையில் ஈடுபடுவதாலேயே குறித்த பாலத்தின் கட்டுமானப்பணி தாமதப்படுவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே குறித்த பால வேலையினை விரைந்து முடிவுறுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.(Vavuniyan)
No comments