95 ரூபா இலாபத்தில் நாட்டரிசி l எங்கே வாங்க முடியும்
இந்த ஆண்டு (2022) முடிவடையும் வரை நாட்டரிசி மற்றும் சூப்பர் சம்பா ஆகிய அரிசி வகைகளை கட்டுப்பாட்டு விலையில் சதொச ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
இதன்படி, ஒரு கிலோகிராம் நாட்டரிசியை 105 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் சூப்பர் சம்பா அரிசியை 130 ரூபாவிற்கும் இந்த ஆண்டு முடிவடையும் வரை சதொச ஊடாக வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
எந்தொரு காரணத்திற்காகவும், இந்த அரிசி வகைகளுக்கான விலை, இந்த ஆண்டு முடிவடையும் வரை அதிகரிக்காது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அம்பலாங்கொடை பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் தெரிவித்திருந்தார்.
சதொச ஊடாக ஒரு கிலோகிராம் பயறு, 225 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்தார்.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோகிராம் நாட்டரிசி இன்று (14) 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது
இந்த நிலையில், ஒரு கிலோகிராம் நாட்டரிசியை சதொச வர்த்தக நிலையங்களின் ஊடாக 95 ரூபா இலாபத்திற்கு கொள்வனவு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது(Vavuniyan)
No comments