வவுனியாவில் எம்ஜிஆர் நற்பணி மன்றத்தினால் பொங்கல் பானை வழங்கிவைப்பு
வவுனியாவில் எம்ஜிஆர் நற்பணி மன்றத்தினால் பொங்கல் பானை வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியாவில் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால் வருடா வருடம் இடம்பெற்று வரும், அனைவரும் பொங்குவோம் எனும் செயற்றிட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களிற்கு நேற்றும், இன்றையதினமும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இச்செயற்திட்டத்தின் ஊடாக வேலங்குளம், சின்னதம்பனை, ஓமந்தை, புதியவேலர்சின்னக்குளம், மகாறம்பைக்குளம் கருப்பனிச்சான்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 100 குடும்பங்களிற்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments