வவுனியா கற்குளம் பகுதியில் வறிய குடும்பத்திற்கு வீடு கையளிப்பு!
வவுனியா கற்குளம் பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு புதியவீடு ஒன்று கையளிக்கப்பட்டது.
குறித்த குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு வவுனியாவை சேர்ந்த வர்த்தகர் மயூரனின் நிதியில் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் குறித்த வீடு அமைக்கப்பட்டு இன்றையதினம் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது.
இரண்டு பிள்ளைகளுடன் மூன்று பேரை உள்ளடக்கிய அக்குடும்பம் தற்காலிக கொட்டில் ஒன்றில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வந்திருந்த நிலையிலேயே அவர்களிற்கு குறித்த வீடு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
நிகழ்வில் வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சம்பிக்க ரணசிங்க, மற்றும் வர்த்தகர் மயூரன் அவரது குடும்பத்தினர், சமுர்த்தி உத்தியோகத்தர், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். (Vavuniyan)
No comments