இம்முறை சித்திரை புத்தாண்டை கொண்டாட முடியுமா?
ஒமிக்ரோன் ரைவஸ் தொற்று பரவுவதை தடுத்து, பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் மாத்திரமே, இம்முறை சித்திரை புத்தாண்டை கொண்டாட முடியும் என்று சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கொவிட் 19 தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், இந்த வைரஸ் சமூகத்திற்குள் பரவியுள்ளதா என்பதை சரியாக தற்போது கூற முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.
எனினும், இந்த வைரஸை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான இயலுமை தற்போதும் காணப்படுவதாக டொக்டர் ஹேமந்த ஹேரத் நம்பிக்கை வெளியிட்டார். (Vavuniyan)
Post Comment
No comments