Breaking News

பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் சற்றுமுன் கைது


பாணத்துறை பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபர் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோரிடம் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். (Vavuniyan) 


No comments