Breaking News

வவுனியாவில் தெய்வீக கிராமிய நிகழ்வு


இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியா பிரதேச செயலகம் நடாத்தும் “தெய்வீககிராமிய நிகழ்வும் கலை கலாசார பாரம்பரிய ஊர்வலமும் வவுனியா, சிதம்பரபுரம் பழனி முருகன் வளாகத்தில் இன்று இடம்பெற்றது. 


வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள்,அரசாங்க அதிபர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார். சிறப்பு அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் பிரியதர்சினி சஜீவன், உதவி மாவட்ட செயலாளர், திருமதி.ம.சபர்ஜா மற்றும் தலைவர், தமிழ்விருட்சம் செ.சந்திரகுமார் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிகழ்வில் கலைகலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்,  ஆசிகுளம்அறநெறிப் பாடசாலைகளை சேர்ந்த 150மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் 15 அறநெறி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

நிகழ்விற்கு தமிழ்விருட்சம், சிவனருள் அறக்கட்டளை,இயற்கையின் செல்வங்கள், டென்மார்க் பிராண்ட அபிராமி அம்மன் ஆலயம் ஆகியன அனுசரணை வழங்கியிருந்தது.









No comments