Breaking News

எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு


யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது. 

யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாகவே இன்று காலை முதல் எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

இதன்போது, முதல் வருகைதரும் 300 பேர்களுக்கு மட்டும் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் எனும் பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது எரிவாயுவைப் பெறுவதற்காக பற்றுச்சீட்டு ஒன்றும் வழங்கப்பட்டு அதன்படி வரிசையில் நின்று பெறுவதைக் காணமுடிந்தது.


No comments