ராஷ்மிகா மந்தனா சம்பளம் இத்தனை கோடியா? நயன்தாராவை விட அதிகமா
தென்னிந்தியாவில் முதல்தர நடிகைகளில் ஒருவராக வளர்ந்து இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படம் மிகப்பெரிய ஹிட் ஆனதில் இருந்து அவர் அந்த படத்திற்காக ராஷ்மிகா வாங்கிய சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.
புஷ்பா முதல் பாகத்திற்கு மட்டும் ராஷ்மிகா மூன்று கோடி ருபாய் சம்பளம் வாங்கி உள்ளாராம். மேலும் புஷ்பா இரண்டாம் பாகத்திற்கும் அதே தொகையை அவர் பெற போவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதனால் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் ராஷ்மிகா மாறி இருக்கிறார்.
நயன்தாரா ஒரு படத்திற்கு நான்கு கோடி வரை சம்பளம் கேட்பதாக சமீபத்தில் தகவல் வந்ததும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் ராஷ்மிகாவிடம் அவரது சம்பளம் பற்றி கேட்டபோது அவர் சற்று sarcastic ஆக பதில் அளித்தார். நீங்கள் இப்படி செய்தி போடுவதால் தான் என் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு வருகிறார்கள் என தெரிவித்து உள்ளார். (Vavuniyan)
No comments