ராஜபக்ஷ சகோதரர் முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்ட பிக்குவால் பதற்றம்
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் மூத்த சகோதரான அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் சூரியவெவ கிராம மக்களுக்கு இடையில் இன்று மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.
மகாவலி காணி பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இடம்பெற்ற வாய்த்தராறு மோதல் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணி பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதற்காக அமைச்சர் ராஜபக்ஷவை சந்திப்பதற்கு சூரியவெவ கிராம மக்கள் அமைச்சரின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
இதன் போது அங்கிருந்த தேரர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அங்கிருந்த சிலருக்கு குறித்த பிக்கு தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளார். எனினும் இறுதியில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படவுள்ளது என்று அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(Vavuniyan)
No comments