வவுனியாவில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவுதினம் அனுஸ்டிப்பு!!
திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நகரசபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது சு.சுகிர்தராஜனின் உருவபடத்திற்க்கு மாலை அணிவிக்கப்பட்டு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் தொடர்பான நினைவுப்பேருரைகளும் இடம்பெற்றது.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், பிரதேசசபை தவிசாளர் த.யோகராஜா, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,பொது அமைப்புக்கள்,
ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.(Vavuniyan)
No comments