Breaking News

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வவுனியாவில் கடமைகளை பொறுப்பேற்றார்

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடந்த புதன்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார்.

அவருக்கு வவுனியா நீதிமன்றங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் சட்டத்தரணிகள் அமோக
வரவேற்பளித்தனர்.

நீதிச் சேவையை வவுனியா மாவட்டத்தில் ஆரம்பித்த மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சேவையில் 25 வருடங்களை எட்டியுள்ள நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக மீள வந்துள்ளமை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்ற பதிவாளர் மீரா வடிவேற்கரசன் தலைமையில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.

No comments