Breaking News

மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலிலிருந்து விடுவித்தது சீனா


சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவுஇ மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலிலிருந்து விடுவித்துள்ளது.

சீனாவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்றீரியா இருப்பதாக கூறி அதனை நிராகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இந்த நிலையில், அதற்குரிய பணத்தை செலுத்த மக்கள் வங்கி பின்வாங்கிய நிலையில்இ மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்க சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, இரண்டு தரப்பினரும் நீதிமன்றில் இணக்கப்பாட்டை எட்டிய நிலையில், மக்கள் வங்கி 6.9 மில்லியன் அமெரிக்க டொலரை கடந்த 7ம் திகதி செலுத்தியிருந்தது.

கடந்த 8ம் திகதி சீன வெளிவிவகார அமைச்சர் வாங்யி,  இலங்கை நாட்டிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே, மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலிலிருந்து சீன விடுவித்துள்ளது.(Vavuniyan)


No comments