பொதுமக்களுக்கான விசேட நிவாரணப் பொதி அறிமுகம்
இலங்கை மக்களுக்கான விசேட நிவாரணப் பொதியொன்றை வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
10 கிலோ சுப்பிரி சம்பா அரிசி உட்பட 20 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கியதாக இந்த நிவாரணப் பொதியை லங்கா சதொச நிறுவனத்தில் இருந்து 3998 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வர்த்தகத் துறை அமைச்சரால் வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொதியில்,
- சுப்பிரி சம்பா 10 கிலோ
- ஒரு கிலோ வெள்ளை சர்க்கரை
- ஒரு கிலோ சிவப்பு பருப்பு
- ஒரு கிலோ இடியப்ப மா
- 500 கிராம் நெத்தலி
- 400 கிராம் நூடுல்ஸ்
- 400 கிராம் உப்பு
- 2 தேங்காய் பால் (330 மிலி பாக்கெட்)
- 100 கிராம் மிளகாய் தூள்
- மிளகு தூள் 100 கிராம்
- 100 கிராம் மசாளா தூள்
- 100 கிராம் மஞ்சள்
- 100 கிராம் தேநீர்
- 80 கிராம் உடல் லோஷன்
- சதோச சந்தன சோப்பு
- 100 மில்லி கை கழுவும் திரவம்
- 90 கிராம் சோயாமீட்
- சதோச TFM தரப்படுத்தப்பட்ட சலவை சவர்க்காரம்
- 1 பைக்கற்று பப்படம்
- 10 முகக்கவசங்கள்
குறித்த பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி இன்றையதினம் முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நுகர்வோருக்கு கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.(Vavuniyan)
No comments