வவுனியாவில் சமூக சேவையாளர் கதிர்காமராஜாவுக்கு அஞ்சலி
பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் முன்னாள் தலைவரும் சமூக சேவையாளருமான மா.கதிர்காமராஜாவின் (புஸ்) ஆத்மசாந்தி பிரார்த்தனை வவுனியாவில் இன்று இடம்பெற்றது.
பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றம் மற்றும் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றங்களின் ஏற்பாட்டில் கோ.சிறிஸ்கந்தராஜா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றிருந்தன.
நிகழ்வில் சிரேஸ்ட சட்டத்தரணி மு.சிற்றம்பலம், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.(Vavuniyan)
No comments