Breaking News

முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் வவுனியாவில் கைது


முல்லைத்தீவிலிருந்து கொழும்பு  நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்ற இளைஞர்கள் இருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.


நேற்று (10) இரவு 9.50 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி மகேந்திரா ரக வாகனத்தில் கஞ்சாவினை கடத்தி சென்ற போது பூவோயா சோதனைச்சாவடியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட இராணுவம் மற்றும் பொலிஸார் வாகனத்தில்  பயணித்த முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பை சேர்ந்த 22, 39 வயதுடைய இரு இளைஞர்களை 22கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.(Vavuniyan) 

No comments