Breaking News

வவுனியா ஓமந்தையில் கைக்குண்டு மீட்பு


வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


ஓமந்தை நாவற்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியில் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக ஓமந்தை பொலிஸில் காணி உரிமையாளரால் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து பொலிஸாரினால் குறித்த கைக்குண்டு அகற்றப்பட்டு அதனை செயலிழக்கச்செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.(Vavuniyan) 

No comments