Breaking News

உயர்தர பரீட்சைக்காக இன்றிரவு முதல் அமுலாகும் ஓர் அறிவிப்பு


கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளுக்காக நடத்தப்படும் மேலதிக வகுப்புகள் இன்று (01) நள்ளிரவு 12 மணியுடன் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

உயர் தர பரீட்சைகள் நிறைவடையும் வரை, உயர்தர பரீட்சை தொடர்பான எந்தவொரு மேலதிக வகுப்புக்களும் நடத்தப்பட கூடாது என திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், உயர்தர பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

2021 − 2022 ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 7ம் திகதி முதல் மார்ச் மாதம் 5ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

2,438 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ள இம்முறை பரீட்சைக்காக, 345,242 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.(Vavuniyan) 

No comments