பேருந்து விபத்து - பரிதாபமாக உயிரிழந்த பெண்
யாழ். நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், ஏ-9 வீதி நாவற்குழி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். குறித்த பெண் வீதியோரமாக இருந்த மண் பிட்டியில் கால் வைத்தபோது கால் தடுமாறி பேருந்து சக்கரத்திற்குள் விழுந்துள்ளார். குறித்த பெண் வீதியில் விழுந்ததை கவனிக்காமல் பேருந்து அங்கிருந்து புறப்பட்டது.
இதன்போது பெண்ணின் தலை பேருந்தின் பின்பக்க சில்லில் நசியுண்டது . உடனடியாக மீட்கப்பட்ட பெண் பட்டாரக வாகனத்தின் உதவியுடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் சாவகச்சேரி வைதியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. (Vavuniyan)
No comments