Breaking News

மூன்று மாதங்களுக்கு முன்னர் ஓய்வை அறிவிக்க வேண்டும் – ஸ்ரீலங்கா கிரிக்கெட்


இலங்கை தேசிய கிரிக்கெட் அணியிலிருந்து வீரரொருவர் ஓய்வு பெற வேண்டும் என்றால், மூன்று மாதங்களுக்கு முன்னரே அதற்கான முன்னறிவிப்பை வெளியிட வேண்டும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது.

ஓய்வு பெறுவதற்கான தீர்மானத்தை எட்டும் போதுஇ அதற்கு முன்னர் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்று குழு கூட்டத்திலேயே இநத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பானுக்க ராஜபக்ஸவின் திடீர் ஓய்வுக்கான அறிவிப்பை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வை அறிவிக்கும் போது, மூன்று நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.(Vavuniyan)

No comments