Breaking News

இலங்கையில் சிறுவர்களை தாக்கும் கொரோனா


கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகும் சிறார்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக பொரள்ளை ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் ஷன்ன டி சில்வா தெரிவிக்கின்றார்.

ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 20ற்கும் குறைவாக சிறார்களே சிகிச்சை பெற்று வந்தத நிலையில்  தற்போது  50திற்கும் அதிக கொரோனா தொற்றுக்குள்ளான சிறார்கள் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டார்

வீடுகளில் தங்கியிருந்து சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளுக்கு சில சிறார்களை ஈடுபடுத்தியுள்ள நிலையிலேயே, வைத்தியசாலையில் தற்போது 50திற்கும் அதிகமான சிறுவர் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.

சிறுவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டாலும், அறிகுறிகள் தென்படுவது மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, மாரவில வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமிக்கு, கொவிட் 19 நியூமோனியா நிலைமை காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். (Vavuniyan) 

No comments