கொவிட் பலியெடுத்த பாடசாலை மாணவி
கொவிட் 19 தொற்றுக்குள்ளான குறித்த மாணவி, மாரவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, உயிரிழந்துள்ளார்.
தம்மிஸ்ஸர தேசிய பாடசாலையின் 6ம் தரத்தில் கல்வி பயின்ற மாணவி ஒருவரே, நேற்றையதினம் (30) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கூறியுள்ளார்.
நாத்தாண்டிய − தப்போவ பகுதியைச் சேர்ந்த B.M.T.மனிஷா குமாரி பெர்ணான்டோ என்ற மாணவியே, கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கடந்த 28ம் திகதி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய மாணவிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த மாணவி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், சிறுமிக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் உயிரிழந்துள்ளார். (Vavuniyan)
No comments