தங்க கையிருப்பிலும் கைவைத்தது அரசு
இலங்கை மத்திய வங்கி வைத்துள்ள தங்க கையிருப்பில் ஏறக்குறைய பாதிவரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா(Harsha de Silva) தெரிவிக்கின்றார்.
இலங்கை மத்திய வங்கியில் உள்ள 382 மில்லியன் டொலர் மதிப்பிலான தங்கத்தில் தற்போது 175.4 மில்லியன் டொலர் மதிப்பிலான தங்கம் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் 500 மில்லியன் டொலர் கடன் தவணையை இலங்கை அரசு எவ்வாறு செலுத்தும் எனவும் அவர் கேள்வி எழுப்பியெழுப்புகின்றார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவிட்டுள்ள போதே இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments