இனிமேல் பாணுக்கும் வரிசைதான்! நாங்கள் என்ன செய்வது - கைவிரித்த பேக்கரி உரிமையாளர் சங்கம்
எதிர்காலத்தில் பாணுக்கு பெரிய தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
எதிர்காலத்தில் பாணுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம். நாங்கள் நேற்று கோதுமை மா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். போதுமான அளவுக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யலாம், டொலர் இல்லாததே பிரச்சினையாகும். அவர்களுக்கு இறக்குமதி செய்ய தேவையான டொலர்களில் 10 வீதம் மாத்திரமே கிடைப்பதாக கூறுகின்றனர். நாங்கள் என்ன செய்வது.
அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட்டு கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் மிகப் பெரிய நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும். குறிப்பாக வரிசையில் நின்றும் பாணை கொள்வனவு செய்ய முடியாத நிலைமையை சாதாரண மக்கள் எதிர்நோக்கலாம் என தெரிவிக்கின்றார்.
மேலும் வெதுப்பக உரிமையாளர்கள் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்துள்ளனர். ஒரு மூட்டை கோதுமை மாவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
No comments