வவுனியாவில் ஆடைகளை திருடியவர் நையப்புடைப்பு
வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையங்களில் ஆடைகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் அந்த வீதியில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றில் ஆடைகளை திருடியபோது கையும் மெய்யுமாக அகப்பட்டார். அவரை சுற்றிவளைத்த இளைஞர்கள் அவரது கைகளை கட்டிநையப்புடைத்ததுடன், பொலிசாருக்கும் தகவல் தெரிவித்தனர்,
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த நபரை கைதுசெய்து பொலிஸ்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ள நிலையில் வவுனியாவில் கடந்த சில நாட்களாக திருட்டுச்சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(Vavuniyan)
Post Comment
No comments