வவுனியா மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு
வவுனியா மாவட்டத்தின் விவசாயிகள் சம்மேளன நிர்வாக தெரிவு இன்று காலை மாவட்ட விவசாய கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் விஸ்னுதாசன் தலைமையில் நிர்வாக தெரிவு இடம்பெற்றிருந்தது.
இப்புதிய நிர்வாக தெரிவின் போது தலைவராக சிறீதரன் செல்லதம்பியும், செயலாளராக பகீரதன் இராசதுரையும், பொருளாளராக ஞானசுந்தரம் நல்லையாவும் தெரிவு செய்யப்பட்டு புதிய மாவட்ட விவசாய சம்மேளனம் உருவாக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.(Vavuniyan)
No comments