Breaking News

வவுனியாவில் இருவேறு இடங்களில் மோட்டார் குண்டுகள் மற்றும் துப்பாக்கி மீட்பு


வவுனியாவில் இருவேறு இடங்களில் இருந்து மோட்டார் குண்டுகள் மற்றும் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. (Vavuniyan)


வவுனியா ஓமந்தை, நாவற்குளம் காட்டுப்பகுதியில் இருந்து  உள்ளூர் தயாரிப்பான இண்டியன் ரக துப்பாக்கி ஓமந்தை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா ஈச்சங்குளம், தவசியாகுளத்தில் இருந்து 60 மில்லிமீற்றர் செல் மற்றும் கொத்துக்குண்டு ஒன்றும் ஈச்சங்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை மற்றும் ஈச்சங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

No comments